இந்தோனேஷியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.
ஜாவா தீவில் நிலநடுக்கம்
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் நேற்று 5.6 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.
மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியை மையம் கொண்ட உருவான இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 162 பேர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, சுமார் 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
(Image: BASARNAS via AP)
#Earthquake (#gempa) possibly felt 49 sec ago in #Indonesia. Felt it? Tell us via:
— EMSC (@LastQuake) November 21, 2022
?https://t.co/LBaVNdVFgz
?https://t.co/AXvOM7qtuH
?https://t.co/wPtMW5w1CT
⚠ Automatic crowdsourced detection, not seismically verified yet. More info soon! pic.twitter.com/NKVXnD4mJG
பணியாளர்கள் தேவை
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் சுகாதார பணியாளர்கள் தேவைப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைவது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.