பிரான்சிலிருந்து முதல் 3 ரஃபேல் போர் விமானங்களை பெற்ற ஆசிய நாடு
இந்தோனேசியா தனது பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்சிலிருந்து முதல் 3 ரஃபேல் போர் விமானங்களை பெற்றுள்ளது.
இது 2022-ஆம் ஆண்டு கையெழுத்தான 8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முதல் விநியோகம் ஆகும்.
இந்தோனேசியா மொத்தம் 42 ரஃபேல் விமானங்கள், அதோடு பிரான்ஸ் தயாரிக்கும் படகு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் ஆர்டர் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தலைமையிலான அரசின் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

விமானங்கள் எங்கள் வான்படைக்கு ஒப்படைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரிகோ ரிக்கார்டோ சிராயத் தெரிவித்துள்ளார்.
இந்த 3 விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை சுமத்ரா தீவிலுள்ள ரூஸ்மின் நுர்ஜடின் வான்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல விமானங்கள் இந்த ஆண்டுக்குள் வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியா, தனது பழைய விமானங்களை மாற்றும் நோக்கில், சீனாவின் J-10 மற்றும் அமெரிக்காவின் F-15EX போர் விமானங்களையும் பரிசீலித்து வருகிறது.
நீண்டகால திட்டமாக, துருக்கியில் இருந்து 48 KAAN 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம், தென்கிழக்கு ஆசியாவில் பிரான்சின் முக்கிய ஆயுத வாடிக்கையாளராக இந்தோனேசியாவை நிலைநிறுத்துகிறது.
“ரஃபேல் விமானங்கள் இந்தோனேஷியாவின் வான்படை திறனை மிகுந்த அளவில் மேம்படுத்தும்” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indonesia Rafale fighter jets, Rafale jets delivery France Indonesia, Indonesia air force upgrade 2026, Rafale deal Indonesia France, Indonesia defense modernization, Rafale aircraft Southeast Asia, Indonesia military procurement news, Rafale fighter jet capabilities, Indonesia France defense ties, Rafale jets Asia Pacific security