ஹிஜாப் சரிவர அணியாத மாணவிகளின் பாதி தலையை மொட்டை அடித்த ஆசிரியர்
இந்தோனேசியாவில் ஹிஜாப் சரியாக அணியாத 14 முஸ்லிம் மாணவிகளின் தலையின் ஒரு பகுதியை மட்டும் ஆசிரியர் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்
இந்தோனேசிய தீவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆகஸ்ட் 28ம் திகதி ஹிஜாப் சரிவர அணியாத 14 முஸ்லிம் பெண்களின் தலையின் ஒரு பகுதியை மட்டும் ஆசிரியர் ஒருவர் மொட்டை அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது என அதன் தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை கிழக்கு ஜாவா நகரமான லமோங்கனில் உள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் அடையாளம் வெளியிடப்படாத ஆசிரியரால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
PTI
27 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் உள்ள கன்சர்வேட்டிவ் பகுதியில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்த படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகளால் 2021ம் ஆண்டு முதல் இதுபோன்ற கட்டாயம் ஆடை விதிமுறைகளை தடை செய்ய நாடு முன் நகர்ந்து வருகிறது.
AFP
மன்னிப்பு கோரிய தலைமை ஆசிரியர்
இதற்கிடையில் தலைமை ஆசிரியர் ஹார்டோ பாதிக்கப்பட்ட பெண் மாணவிகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
வலதுசாரி அமைப்புகள் ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும் தலைமை ஆசிரியர் ஹார்டோ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |