பன்றிக்கறி சாப்பிட்டதால் 250 மில்லியன் அபராதம்... TikTok பெண்ணிற்கு நடந்தது என்ன?
பன்றிக்கறி சாப்பிட்டதால் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பன்றிக்கறி சாப்பிட்ட பெண்
லினா முகர்ஜி என்ற டிக்டாக் பிரபலமான பெண் ஒருவர் தனது டிக்டாக் செயலியிலுக்கு புதிய வீடியோவை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட ஒரு வீடியோவானது இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவானது அவருக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான வீடியோ
அந்த பெண் பன்றி இறைச்சியை சாப்பிடும் போது ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையை கூறி அந்த இறைச்சியை சாப்பிட்டுள்ளார். அதுவே அவருக்கு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையாது அரபியில் ‘இறைவனின் பெயரால்’ என்று அர்த்தமாகும். இந்த வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்ட உணவான பன்றிக்கறியை சாப்பிட்டதால் இந்த பிரச்சிரனை ஏற்பட்டுள்ளது.
Indonesian influencer sentenced to 2 years in prison for saying ‘Bismillah’ before eating pork.
— Censored Men (@CensoredMen) September 20, 2023
In Arabic “Bismillah” means “In the name of Allah” and pork is forbidden for Muslims. pic.twitter.com/oR1BTYMkiT
பாலி தீவுக்கு சுற்றுலா சென்றபோது ஆர்வத்தில் அப்படி ஒரு வீடியோவை எடுத்ததாக லினா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக பலரும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கூறி வந்துள்ளனர்.
இதையடுத்து இந்தோனேசிய போலீசாரால் அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 250 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |