ஆன்மீக பலத்தால் மயங்கும் பெண்கள்…61வது வயதில் தனது 88வது திருமணத்திற்கு தயாராகும் விவசாயி!
பிளேபாய் கிங் என அழைக்கப்படும் 61 வயதான இந்தோனேசிய விவசாயி கான்.
88வது முறையாக திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவிப்பு.
பிளேபாய் கிங் எனப்படும் 61 வயதான இந்தோனேசிய விவசாயி, தனது 88வது திருமணத்தை செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் மஜலெங்கா (Majalengka) மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கான்(61), இன்னும் தன் மீது அன்பு கொண்டிருக்கும் தனது முன்னாள் மனைவி ஒருவரை 88வது முறையாக திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படும் விவசாயி கான் உள்ளூர் ஊடகத்திற்கு தெரிவித்த தகவலில், நான் எனது முன்னாள் மனைவிகளில் ஒருவரை 86-வதாக திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
Newsflash
நாங்கள் நீண்ட காலம் பிரிந்து இருந்தாலும், எங்களுக்கு இடையிலான காதல் வலுவாக உள்ளது, இந்த அதனை காலத்திலும் அவள் என் மீது பைத்தியமாக தான் இருந்துள்ளார், இப்படிக்கும் நாங்கள் திருமணம் ஆகி ஒரு மாதம் காலம் சேர்ந்து இருந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கானின் (Kaan) முதல் திருமணம் விவாகரத்து அடைந்த பிறகு மிகவும் விரக்தி அடைந்ததாகவும், அதன் பிறகு ஆன்மீக தேடலில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். தனது ஆன்மீக பலத்தால் தற்போது பல பெண்கள் அவரது காலடியில் மயங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Newsflash
கூடுதல் செய்திகளுக்கு: சீன படைகளின் தயாரிப்புகளை அதிகப்படுத்துங்கள்: ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிரடி உத்தரவு
எனக்கு தெரிந்து பெண்களுக்கு நல்லதல்ல அல்லது அவர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல்களை நான் செய்ய விரும்புவது இல்லை என தெரிவித்த 61 வயதுடைய கானை, அருகில் உள்ளவர்கள் “பிளேபாய் கிங்” என்று அழைக்கின்றனர்.
Newsflash