மயங்கிய நிலையில் அமெரிக்காவில் தரையிங்கிய ஆப்கான் பச்சிளம் குழந்தை மரணம்! நடுவானில் என்ன நடந்தது?
ஜேர்மனியிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட மீட்பு விமானத்தில் நடுவானில் மயங்கிய ஆப்கான் பச்சிளம் குழந்தை, அமெரிக்காவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ அஞ்சி பலர் நாட்டை விட்டு வெளியேறினர்.
பச்சிளம் குழந்தையுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய குடும்பத்தினர், மீட்பு விமானம் மூலம் ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின் Ramstein விமான தளத்திற்கு பயணித்துள்ளனர்.
பின் அங்கிருந்து C-17 விமானத்தில் அமெரிக்க பயணித்துள்ளது. விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது 9 மாத ஆப்கான் பெண் குழந்தை உணர்ச்சியின்றி மயங்கியதை கண்ட விமானக் குழுவினர், உடனடியாக மருத்துவ உதவி வேண்டி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விமானம் Philadelphia-வில் தரையிறங்கியவுடன், குழந்தையும் தந்தையும் Philadelphia-வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் சொன்னத்தை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.