ஒரு மாதத்திற்கும் மேலாக பொது வெளியில் காணப்படாத ‘ஆங் சான் சூச்சி’ குறித்து வழக்கறிஞர் வெளியிட்ட முக்கிய தகவல்! எப்படி இருக்கிறார்?
மியான்மரின் ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூச்சி எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது வழக்கிறஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மியான்மரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பொது வெளியில் காணப்படாத ஆங் சான் சூச்சி, உடல் நலத்துடன் இருப்பதாக அவரது வழக்கறிஞர் Min Min Soe தகவல் தெரிவித்துள்ளார்.
ஆட்சி கவிப்புக்கு பின்னர் ஒரு மாதத்திற்கு முன்பு ஆங் சான் சூச்சி மீது புதிய வழக்கு பதியப்பட்டது.
அதாவது, மியான்மரில் பீதி அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆங் சான் சூச்சி அதுபோன்ற தகவல்களை வெளியிட்டதாக அவர் மீது புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் காணொளி காட்சி மூலம் நீதிமன்ற விசாரணையில் ஆஜரானார்.
இதுகுறித்து வழக்கறிஞர் Min Min Soe கூறியதாவது, திங்களன்று காணொளி காட்சி மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையில் ஆங் சான் சூச்சி நல்ல உடல்நலத்துடன் தோன்றினார்.
விசாரணையின் போது தனது சட்டக் குழுவை சந்திக்க வேண்டும் என சூகி கோரிக்கை விடுத்ததாக வழக்கறிஞர் Min Min Soe கூறினார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 15ம் திகதி நடைபெறவுள்ளது என்று Min Min Soe கூறினார்.