கொரோனா தடுப்பூசியில் பன்றியின் புரதப்பொருள் சேர்க்கப்படுவதாக கூறப்பட்ட தகவல்! அது குறித்து வெளியான உண்மை
கொரோனா தடுப்பூசியில் பன்றியின் புரதப்பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை என அதை தயாரிக்கும் நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த தடுப்பூசியில் பன்றியின் கணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட டிரிப்சின் என்ற புரதப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி ஹராம் என்றும் அதை இஸ்லாமியர்கள் போட்டுக் கொள்ளக்கூடாது என இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் தனது இணையதளத்தில் கூறியிருந்தது.
அதே நேரம் அவசரமான காலகட்டத்தில் இந்த தடுப்பூசியை போடுவதில் தவறில்லை எனவும் கவுன்சில் தெரிவித்திருந்தது.
இந்த சூழலை அடுத்து தான் பன்றியின் புரதப்பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை என ஆஸ்ட்ராஜெனகா கூறியுள்ளது.