இன்ஸ்டாகிராம் நோட்ஸில் 30 விநாடிகளுக்கு பாடலை பகிரலாம்: மெட்டாவின் புதிய அப்டேட்
இன்ஸ்டாகிராம் நோட்ஸில் பயனர்கள் 30 வினாடிகள் வரை பாடல்களை பகிர்ந்து கொள்ளும் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் நோட்ஸ்
சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம் கோடிக்கணக்கான பயனர்களை தன்வசம் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக பயனர்கள் பயன்பாட்டில் புதிய முறைகளை அந்த நிறுவனம் தொடர்ந்து உட்புகுத்தி வருவதே.
அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் வெளியிட்டு இருந்த இன்ஸ்டாகிராம் நோட்ஸ் என்ற புதிய அப்டேட் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
எங்கட்ஜெட்டின்(Engadget) தகவலின் படி, கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான டீன் ஏஜ் மக்கள் பயன்படுத்தும் கணக்குகள் இந்த இன்ஸ்டாகிராம் நோட்ஸ் வசதியை பயன்படுத்தி உள்ளன.
பயனர்களின் நேரடி செய்தி அணுகுதலில்(Direct Messages) இருக்கும் இந்த நோட்ஸ் வசதி, இமோஜிக்கள் உட்பட 60 எழுத்துகளை உள்ளடக்கிய தற்காலிக இடுக்கையை குறிப்பிட்ட நபருக்கு பகிர உதவுகிறது.
இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த இடுக்கைகள் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும்.
புதிய அப்டேட்
பெரும்பாலான இளைஞர்களை கவர்ந்த இன்ஸ்டாகிராம் நோட்ஸில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை அந்த நிறுவனம் சேர்த்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டில், இனி பயனர்கள் அவரது இன்ஸ்டாகிராம் நோட்ஸ் வாயிலாக 30 விநாடிகளுக்கு அவர்களுக்கு பிடித்த பாடலை விருப்பமானவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும்.
இதனை மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அவரது சேனலில் உரையாடிய போது தெரிவித்துள்ளார், அதில் இனி பயனர்கள் 30 நிமிடங்கள் வரை அவருக்கு பிடித்தமான பாடலை பகிர்ந்து கொள்ள முடியும், என்னுடைய இந்த இசை ரசனை உயர்த்தியதற்காக எனது மகளுக்கு சத்தமாக நன்றி செல்லுங்கள் என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |