2025-ல் 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த தொழில்நுட்ப நிறுவனம்
2025-ல் 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனமொன்று அதிர்ச்சியளித்துள்ளது.
சிப்செட் ஜாம்பவான் Intel நிறுவனம், 2025-ஆம் ஆண்டு தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய மாற்றத்தைச் செய்கிறது.
மொத்தமாக 24,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது 2024 இறுதியில் நிறுவனத்தில் இருந்த ஊழியர்களில் நான்கில் ஒருவருக்குச் சமமானது.
இன்டெலின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) லிப்-பு டான்(Lip-Bu Tan), இந்த கடினமான முடிவுகளை எடுத்துள்ளார்.
ஜேர்மனி மற்றும் போலந்தில் திட்டமிட்டிருந்த பாரிய உற்பத்திச் சேதிகளை (factories) கட்டும் திட்டங்களை ரத்து செய்து விட்டது. இந்த திட்டங்கள் செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கலாம்.
கோஸ்டா ரிகாவில் இன்டெல் தனது செயல்பாடுகளின் ஒரு பகுதியை மூடுகிறது. இங்கு பணிபுரியும் 2,000 ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் அவர்களில் பலர் வேறு பணி பொறுப்புகளுக்குள் மாற்றப்படுவார்கள்.
“வாடிக்கையாளர் வருவாரா என்று காத்திருந்து தொழிற்சாலைகள் கட்ட முடியாது. நிஜமாகவே தேவையானவை மட்டுமே இனிமேல் நாங்கள் உருவாக்குவோம்.” என லிப்-பு டான் கூறியுள்ளார்.
இந்த மாபெரும் மாற்றங்களால் இன்டெலுக்கு $2 பில்லியன் செலவாகின்றன. தற்போது $2.9 பில்லியன் இழப்பை எதிர்கொண்டுள்ளதையும், 2025 இரண்டாவது காலாண்டில் $12.9 பில்லியன் வருமானம் ஈட்டியதையும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்டெலின் டேட்டா சென்டர் பிரிவு மட்டும் சிறு வளர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் சாதாரண கணினி சிப்கள் விற்பனை குறைந்துள்ளது. அதே நேரத்தில், AI சந்தையில் போட்டி நிலை தற்காலிகமாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இன்டெல் தனது லேப்டாப்புகளுக்கான புதிய சிப்கள் 2025 கடைசியில் மற்றும் 2026-இல் வெளியிடப்படும் என உறுதி அளித்துள்ளது. மேலும், நிறுவனத்தில் பாரிய மாற்றங்கள் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Intel job cuts 2025, Intel layoffs news, Intel factory shutdown, Intel CEO Lip-Bu Tan, Intel Costa Rica layoffs, Intel AI competition, Intel restructuring 2025, Semiconductor industry news, Chip factory cancellation, Intel financial loss Q2 2025