இந்தியா தாக்குதலை தொடங்கப்போகிறது! பாகிஸ்தான் உளவுத்துறை வெளியிட்ட எச்சரிக்கை
இந்தியாவின் இராணுவ நடடிக்கைக்கு உறுதியாகவும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் இராணுவம்
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளும் தங்களது இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உளவுத்துறை அடுத்த 36 மணிநேரத்தில் இந்தியா தாக்குதலைத் தொடங்கும் என அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு
பாகிஸ்தானின் அமைச்சர் அட்டாவுல்லா தரார், "பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.
ஏற்கனவே, பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது.
இந்தியாவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் உறுதியாகவும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளின் பொறுப்பு இந்தியாவையே சேரும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |