பதவியேற்றார் மக்களவை இடைக்கால சபாநாயகர்.., இந்தியா கூட்டணி எம்பிக்கள் புறக்கணிப்பு
மக்களவை இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பியை நியமனம் செய்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர்.
இடைக்கால சபாநாயகர்
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது.
இதையடுத்து, கடந்த 9-ம் திகதி பிரதமர் மோடி தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. அவருடன் 72 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில் 18-வது நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், புதிய உறுப்பினர்களை பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி புறக்கணிப்பு
தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பி மஹ்தாபுக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், 8 முறை எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷுக்கு பதிலாக, 7 முறை எம்பியாக இருந்த மஹ்தாபுவை நியமனம் செய்ததை கண்டித்து பதவியேற்பு விழாவை இந்தியா கூட்டணி எம்பிக்கள் புறக்கணித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |