சிங்கப்பூர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறினார் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய! வெளியான வீடியோ
இரண்டாம் இணைப்பு
தற்போது இவர் சிங்கப்பூர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சு “கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் அடைக்கலம் கேட்கவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை ” எனவும் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே கோட்டாபய சிங்கப்பூர் சென்றிருந்தார்.
மேலும் சிங்கபூர் விமானநிலையத்தில் சர்வதேச ஊடகங்கள் அவரது வருகை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.