இலவச e-Tourist விசாக்கள்..! மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் புதிய திட்டம்
மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்திய அரசு புதிய விசா திட்டத்தை தொடங்கியுள்ளது.
இலவச e-Tourist விசாக்கள்
மலேசிய சுற்றுலா பயணிகளுக்காக இந்திய அரசு இரட்டை நுழைவுக்கான இலவச மின்னணு சுற்றுலா விசா (e-Tourist visa) திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி இரு நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.
மலேசியர்கள் e-விசாவிற்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் இப்போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு e-Tourist விசா முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிந்து கொள்ள வேண்டியது என்ன
இந்த சலுகை e-Tourist விசாவிற்கு மட்டுமே பொருந்தும், இது ஒவ்வொரு நுழைவுக்கும் 30 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதிக்கிறது.
பிற e-விசா பிரிவுகளுக்கு (வியாபாரம், மருத்துவம் போன்றவை) இன்னும் வழக்கமான கட்டணங்கள் உள்ளன.
நீங்கள் அதிகாரப்பூர்வ இந்திய விசா வலைதளம் மூலம் ஆன்லைனில் இந்த இலவச -Tourist விசாக்கு விண்ணப்பிக்கலாம்
இந்திய e-Tourist விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் அதைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
மலேசியா சமீபத்தில் இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலம் இரு நாடுகளும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்த விரும்புவது போல் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |