டைம் கேப்ஸ்யூலில் 2276 வரை புதைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட iPhone 17 Pro
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை 4, 2026 அன்று ஒரு பெரிய Time Capsule புதைக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்களுடன், Apple iPhone 17 Pro ஸ்மார்ட்போனும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த iPhone 17 Pro, Cosmic Orange நிறத்தில், நவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

டைம் கேப்ஸ்யூலில் 2276-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் 500-வது ஆண்டு விழாவில் திறக்கப்படும். அதுவரை, இந்த போன் மற்றும் பிற பொருட்கள் மூடப்பட்ட நிலையில் இருக்கும்.
இந்த திட்டத்தின் நோக்கம், 250 ஆண்டுகளுக்குப் பிறகு வாழும் மக்களுக்கு, இன்றைய வாழ்க்கை, தொழில்நுட்பம், மற்றும் மக்கள் பயன்படுத்திய பொருட்களை அறிமுகப்படுத்துவதாகும்.
iPhone 17 Pro, நவீன ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை காட்டும் சின்னமாகக் கருதப்படுகிறது. அந்த காலத்தில் போன் இயங்குமா என்பது சந்தேகமாக இருந்தாலும், அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப நினைவுச்சின்னமாக இருக்கும்.
இந்த முயற்சி, அமெரிக்காவின் வரலாற்று பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறைகளுக்கு பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |