நடுக்கடலில் மிதக்கும் ஐபோன்கள்; படகுகளில் வந்து அள்ளிச்செல்லும் மக்கள்
iphones floating after cargo ship sinks in strait of hormuz: ஹோர்முல் நீரிணையில் சரக்கு கப்பல் மூழ்கியதில், அதிலிருந்து கடலில் மிதக்கும் ஐபோன்களை மக்கள் அள்ளிச்செல்கின்றனர்.
ஹோர்முல் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள்
ஹோர்முஸ் நீரிணையில் சமீபத்தில் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று சிங்கப்பூர் கொடியை ஏந்திய சரக்குக் கப்பலான ஜிஎஃப்எஸ் பிரைட், ஒரு எறிபொருளால் தாக்கப்பட்டு தீப்பிடித்து மூழ்கியது.

சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத்தின்படி, கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனால், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை, கப்பல் பயன்படுத்த அனுமதிக்கப்படாத ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது, கடற்படைக் கண்ணிவெடியில் மோதியதால் கப்பல் மூழ்கியதாகக் கூறியுள்ளது. எனவே, கப்பல் மூழ்கியதற்கான சரியான காரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் உள்ளன.
ஜிஎஃப்எஸ் பிரைட் கப்பல், துபாயிலிருந்து ஆடம்பர வாசனைத் திரவியங்கள் மற்றும் ஐபோன்கள் உள்ளிட்ட சுமார் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கொள்கலன்கள் கடலில் கவிழ்ந்துள்ள நிலையில், அதிலிருந்த ஏராளமான ஐபோன்கள் மற்றும் விலையுர்ந்த வாசனைத் திரவியங்கள் நீரில் மிதக்கின்றன.
Viral footage shows iPhones and other goods floating on the sea surface after a container ship sank in the Strait of Hormuz due to a collision with a sea mine. https://t.co/uLrMokroqL
— Nizam Tellawi (@nizamtellawi) October 14, 2026
சிலர் படகுகள் மூலம் அந்த கொள்கலன்கள் அருகே வந்து, ஐபோன்களையும், வாசனைத் திரவியங்களையும் அள்ளிச் செல்கின்றனர்.