CSK எதற்கும் அஞ்சாதது...சென்னை அணியின் கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் நம்பிக்கை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் சரிவுகளை சந்தித்தாலும் தோல்விகளை கண்டு எப்போதும் அஞ்சாது என சென்னை அணியின் முன்னாள் வீரர் சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி மற்றும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாண்ட மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இந்தநிலையில், சென்னை அணி தொடர் சரிவுகளை சந்தித்தாலும் தோல்விகளை கண்டு எப்போதும் அஞ்சாது என கடந்த ஆண்டு அந்த அணிக்காக விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அணிக்கு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது கண்டிப்பாக தந்திரமான ஒன்று, அவர் இதற்கு முன்பு கேப்டனாக பணியாற்றிய அனுபவம் இல்லாவிட்டாலும், சென்னை அணி ஐபிஎல்-லில் மிகச் சிறந்த அணி, மற்றும் ராபின் உத்தப்பா, ராயுடு, தோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் தலைசிறந்த பயிற்சியாளர்கள் இருப்பதால் எப்போதும் அங்கு அமைதியான சூழலே நிலவும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் தலைசிறந்த பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் தொடரை பற்றி நன்கு தெரியும், அதனால் அவர்கள் எப்போதும் தோல்விகளை கண்டு அஞ்சுவது இல்லை என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை அணியை பந்தாடிய பேட் கம்மின்ஸ்: தொடர் தோல்வி முகத்தில் சென்னை மும்பை அணிகள்!