ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தின் இளம் வீரரை அதிக விலைக்கு வாங்கிய காவ்யா மாறன்!
ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தின் இளம் வீரர் ஹாரி புரூக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக காவ்யா மாறன் அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளார்.
கொச்சியில் நடந்த ஐபிஎல் 2023 ஏலத்தில் இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ரூ.13.25 கோடிக்கு வாங்கியது.
புரூக்கை ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸுடன் ஏலப் போரில் ஈடுபட்டது, அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) போட்டியிட்டது.
புரூக்கின் அடிப்படை விலை ரூ. 1.5 கோடியாக அறிவிக்கப்பட்டது, ஆனால் குறுகிய காலத்தில் சர்வதேச போட்டிகளில் அவரது வியக்கத்தக்க ஆட்டத்தின் மூலம் முக்கியத்துவம் பெற்றதாள் அவரது மதிப்பு ரூ.13.25 கோடி வரை உயர்நதுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 468 ஓட்டங்கள் சராசரியாக 93.60, மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் மற்றும் சிறந்த ஸ்கோரான 153 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்கு 'தொடர் நாயகன்' விருதும் வழங்கப்பட்டது.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர்-அக்டோபரில் நடந்த ஆசிய ஜாம்பவான்களுக்கு எதிரான ஏழு போட்டிகள் கொண்ட T20I தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்திற்காக புரூக்கிற்கு 'தொடர் நாயகன்' விருது வழங்கப்பட்டது. ஏழு இன்னிங்ஸ்களில், அவர் 79.33 சராசரியில் 238 ஓட்டங்கள் எடுத்தார், ஒரு அரை சதம் மற்றும் அதிகபட்சம் 81* எடுத்தார்.
GettyImages