சுப்மன் கில் சகோதரியை மோசமாக விமர்சித்த ஆர்சிபி ரசிகர்கள்
சுப்மன் கில் சகோதரியை மோசமாக விமர்சித்த ஆர்சிபி ரசிகர்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுப்மன் கில்லின் அசத்தல் ஆட்டம்
நேற்று முன்தினம் பிளே ஆப் சுற்றுக்காக கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியும், பெங்களூரு அணியும் மோதின. இப்போட்டியில் தனி ஆளாக நின்று சுப்மன் கில் மாஸ் காட்டி ஆடினார்.
இவரின் அசத்தலான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி தோல்வி அடைந்தது. போராடி விளையாடிய விராட் கோலியின் சதமும் வீண்ணானது. தோல்வியை அடைந்த பெங்களூரு அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
ஆர்சிபி ரசிகர்கள் அத்துமீறல்
இப்போட்டி முடிந்ததும் சுப்மன் கில் சமூகவலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த சுப்மன் கில்லின் சகோதரி ‘மை பேபி’ என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதைப் பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் கண்டமேனிக்கு அவரின் சகோதரியை அத்துமீறி அநாகரீகமாக கமெண்ட் செய்தனர்.
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியதுபோல் நீங்க ஏன் விபத்தில் சிக்கக்கூடாது என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைக் கவனிக்க தேசிய மகளிர் ஆணையம் தலைவர் தனது சமூகவலைத்தளங்களில் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சுப்மன் கில் சகோதரியிடம் யாரெல்லாம் அத்துமீறி விமர்சனம் செய்தார்களோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.