IPL கோப்பையை வெல்ல 114 ஓட்டங்கள் இலக்கு! இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?
ஐபிஎல் 2024 கான இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சன்ரைசர்ஸ் ஐதாராபாத் அணி 114 ஓட்டங்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த இலக்கு
ஐபிஎல் 2024 ம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதாராபாத் அணி மோதும் இந்த இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
We go out to defend 1️⃣1️⃣3️⃣ with all our heart.#KKRvSRH #TATAIPL2024 pic.twitter.com/xRIKVBCf5t
— SunRisers Hyderabad (@SunRisers) May 26, 2024
தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 2 ஓட்டங்களிலும், டிராவிஸ் ஹெட் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
பின்னர் வந்த ராகுல் திரிபாதி (9 ஓட்டங்கள்), ஐடன் மார்க்ராம்(20 ஓட்டங்கள்), நிதிஷ் ரெட்டி (13 ஓட்டங்கள்) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 24 ஓட்டங்கள் குவித்து ரஸல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
Time for the ultimate ?????! ? pic.twitter.com/3qYRtIiLgu
— KolkataKnightRiders (@KKRiders) May 26, 2024
கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
சன்ரைசர்ஸ் அணி இறுதியில் 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்கள் குவித்தது.
கொல்கத்தா அணிக்கு சன்ரைசர்ஸ் நிர்ணயித்த இந்த 114 ஓட்டங்கள் இலக்கே IPL வரலாற்றின் இறுதிப் போட்டியில் மிக குறைந்த இலக்கு ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |