ஐ.பி.எல் 2024: ஏ.ஆர். ரஹ்மான் இசை முதல் இலவச லைவ் ஸ்ட்ரீமிங் வரை! முக்கிய தகவல்
இந்திய கிரிக்கெட் விழா, ஐ.பி.எல், அதன் 17வது பதிப்பிற்காக திரும்பி வந்துள்ளது, பிரம்மாண்டமாக நடைபெற உள்ள தொடக்க விழா இசை நிகழ்ச்சிகள், மற்றும் நடனங்களுடன் சிறப்பாக தொடங்கவுள்ளது.
IPL 2024
2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் 17வது சீசன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை, மார்ச் 22, 2024 அன்று சென்னையில் உள்ள பிரபலமான எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
மாலை 6:30 மணி IST க்கு நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பல பிரபலங்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.
கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து முதல் போட்டியில் முன்னாள் வெற்றியாளர் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோத உள்ளன.
நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள்
இந்த விழாவில் இந்தியாவின் சில முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்திட இருக்கிறார்கள்.
இசை உலக மாமேதை A.R. ரஹ்மான்(A.R. Rahman) அவர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகர் சோனு நிகாம்(Sonu Nigam) ஆகியோர் விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள்.
அதிரடி நடனத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அக்ஷய் குமார்(Akshay Kumar) மற்றும் டைகர் ஷெராஃப்( Tiger Shroff) ஆகியோர் மேடையேற உள்ளார்கள்.
இலவச நேரலை
இந்த விழா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பாகும்.
இலவச லைவ் ஸ்ட்ரீமிங்(Live Streaming) ஜியோ சினிமா ஆப்(JioCinema) மற்றும் இணையதளத்தில் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ipl 2024 opening ceremony, performers, timing, free live streaming, ipl 2024 opening ceremony performers, ipl opening ceremony timing, ipl 2024 live streaming, free ipl 2024 live stream, ipl ceremony chennai