IPL 2024: பட்டையை கிளப்பிய சஞ்சு சாம்சன்! லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தீபக் ஹூடா - கே.எல் ராகுல் ஜோடி
ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் லக்னோ அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. லக்னோ அணிக்கு தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான குயின்டன் டி காக் (8 ஓட்டங்கள்) மற்றும் ஸ்டாயினிஸ் (0 ஓட்டம்) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
SANDEEP SHARMA, WHAT A PEACH TO DISMISS STOINIS FOR A DUCK. ?pic.twitter.com/7Oct5bdGE3
— Johns. (@CricCrazyJohns) April 27, 2024
ஆனால், பின்னர் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா (50 ஓட்டங்கள்) மற்றும் கே.எல் ராகுல் (76 ஓட்டங்கள்) ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை மீட்டெடுத்தனர். அதற்கு பிறகு வந்த நிக்கோலஸ் பூரன் (11) ரன்களில் ஆட்டமிழந்தார்.
ராகுல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 76 ஓட்டங்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் எடுத்தது.
வெற்றியை தட்டித் தூக்கிய ராஜஸ்தான்
இதையடுத்து ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் - பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களும், பட்லர் 34 ஓட்டங்களும் குவித்து வெளியேறினர். பின்னர் வந்த ரியான் பராக் 14 ஓட்டங்களில் ஏமாற்றம் அளித்தார்.
? Left handed Sanju Samson ?#RR skipper switching on gears with that switch hit ? ?
— IndianPremierLeague (@IPL) April 27, 2024
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema ??#TATAIPL | #LSGvRR | @rajasthanroyals pic.twitter.com/IaSCJse7tx
ஆனால் பிறகு களத்தில் ஜோடி சேர்ந்த சாம்சன்- ஜூரல் இணை பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
அதிரடியாக விளையாடிய சாம்சன் மற்றும் ஜூரல் இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
லக்னோ தரப்பில் யாஷ் தாகூர், ஸ்டோய்னிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |