ஜேர்மனியில் சூர்யகுமார் யாதவிற்கு இடுப்பில் அறுவை சிகிச்சை வெற்றி., IPL, T-20 World Cupல் விளையாட சாத்தியம்
சூர்யகுமார் யாதவுக்கு ஜேர்மனியில் வெற்றிகரமாக இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து அவர் சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு இரண்டாவது முறையாக இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, அவர் ஒரு வாரத்தில் இந்தியா திரும்பலாம் என கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சூர்யகுமார் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) ஓய்வும் மறுவாழ்வு பெறுவார். அங்கிருந்து அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முனிச்சில் ஆபரேஷன் நடந்தது
உலகின் நம்பர்-1 டி-20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் அறுவை சிகிச்சை முனிச்சின் நிபுணர் மருத்துவர்களின் மேற்பார்வையில் புதன்கிழமை (ஜனவரி 17) நடந்தது.
அவருக்கு முன், கே.எல்.ராகுலுக்கும் 2022ல் முனிச்சில் sports hernia operation செய்யப்பட்டது.
ராகுல் ஃபிட் ஆகி ஒரு மாதம் கழித்து விளையாடத் தொடங்கினார், ஆனால் சூர்யகுமார் யாதவ் ஃபிட் ஆக 2 மாதங்கள் ஆகலாம்.
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட காயம்
கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த T-20 International போட்டியில் சூர்யகுமார் யாதவிற்கு காயம் ஏற்பட்டது. களத்தடுப்பு செய்யும் போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு sports hernia அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சைகள் காரணமாக, அவர் உடல்நிலைக்கு அதிக நேரம் எடுக்கும்.
Surgery done✅
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 17, 2024
I want to thank everyone for their concerns and well wishes for my health, and I am happy to tell you all that I will be back very soon 💪 pic.twitter.com/fB1faLIiYT
IPL-க்கு உடற்தகுதியுடன் இருப்பார், உலகக் கோப்பையிலும் விளையாடுவார்
Cricbuzz அறிக்கையின்படி, சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு IPL போட்டியில் விளையாட உடற்தகுதியுடன் இருப்பார் என்று BCCI வட்டாரங்கள் தெரிவித்தன. IPL போட்டிகள் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.
IPL போட்டிகளுக்குப் பிறகு T-20 World Cup போட்டியும் ஜூன் 1-ஆம் திகதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இதற்கும் சூர்யா விளையாட தாயாக இருப்பார் என கூறப்படுகிறது.
உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு NCA எடுத்த முடிவு
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதி மற்றும் பயிற்சியை தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) கவனித்து வருகிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக சூர்யா முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ஜனவரி மாதம் சூர்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று என்சிஏ வலியுறுத்தியது. அவர் ஜேர்மனிக்கு செல்வதற்கு முன்பு NCAவில் மறுவாழ்வு செய்து கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு, ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரும் NCA வழிகாட்டுதலின் கீழ் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். மூன்று வீரர்களும் சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தனர், ஆனால் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முழு உடல் தகுதி பெற்றனர். உலகக் கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
.IPL 2024, Suryakumar Yadav, Suryakumar Yadav groin surgery in Germany, Mumbai Indians, T-20 World Cup 2024