IPL 2025: முதல் போட்டி RCB vs KKR., முழு அட்டவணை வெளியீடு
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 18-வது சீசனுக்கான அட்டவணையை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்டது.
மார்ச் 22-ஆம் திகதி தொடடங்கும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 2-வது லீக் போட்டி சென்னையில் மார்ச் 23-ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
65 நாட்களில் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. மே 18 வரை லீக் சுற்றில் 70 போட்டிகள் நடைபெறும், அவற்றில் 12 டபுள் ஹெடர்கள், அதாவது, 2 போட்டிகள் 12 முறை ஒரே நாளில் நடைபெறும். இறுதிப் போட்டி மே 25-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறும்.
ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் பிளே ஆஃப் போட்டிகள்
ஐபிஎல் தொடரின் தொடக்க மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த முறையும் இந்த இரண்டு போட்டிகளும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.
இறுதிப் போட்டி மே 25-ம் திகதியும், குவாலிஃபையர் 2-வது ஆட்டம் மே 23-ம் திகதியும் கொல்கத்தாவில் நடைபெறும்.
கடந்த சீசனின் ரன்னர்-அப் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சொந்த மைதானமான ராஜீவ் காந்தி ஸ்டேடியத்திலும் 2 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும். குவாலிஃபையர் 1 போட்டி மே 20-ஆம் திகதியும், எலிமினேட்டர் போட்டி மே 21-ஆம் திகதியும் நடக்கிறது.
13 மைதானங்களில் 10 அணிகளின் போட்டிகள்
அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முல்லன்பூர் (மொகாலி), டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய 10 அணிகளின் சொந்த மைதானங்கள். இவை தவிர, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் தர்மசாலா ஆகிய 13 இடங்களில் போட்டிகள் நடைபெறும்.
65 நாட்களில் 13 மைதானங்களில் 10 அணிகளுக்கு இடையே 74 போட்டிகள் நடைபெறும்.
IPL 2025 முழு அட்டவணை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BCCI announces schedule for TATA IPL 2025, IPL 2025 schedule