லக்னோவை சாய்த்து ஹைதராபாத் அசத்தல் வெற்றி! LSG-க்கு பறிபோன பிளே ஆஃப் வாய்ப்பு!
ஐ.பி.எல். 2025 லீக் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தொடரிலிருந்து வெளியேறிய லக்னோ
லக்னோவில் நடைபெற்ற பரபரப்பான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Yeh partnership nahi, poori tabaahi hai 🔥 pic.twitter.com/McUCVPaHce
— Lucknow Super Giants (@LucknowIPL) May 19, 2025
இலக்கை நிர்ணயித்த லக்னோ
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 115 ஓட்டங்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய மார்ஷ் 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் பண்ட் 7 ஓட்டங்களில் வெளியேறினார்.
Pooran has crossed 2,000 T20 runs...
— Lucknow Super Giants (@LucknowIPL) May 19, 2025
(ruko zara, sabar karo..)
𝘰𝘯𝘭𝘺 𝘪𝘯 𝘥𝘦𝘢𝘵𝘩 𝘰𝘷𝘦𝘳𝘴! 🤯 pic.twitter.com/iZgbcUKOdU
மார்க்ரம் நிதானமாக ஆடி 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
பின்வரிசையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 45 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி
206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியான தொடக்கத்தை பெற்றது.
தொடக்க வீரர் அதர்வா டெய்ட் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா லக்னோ பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார்.
KLAAS apart Heinrich 🤌
— SunRisers Hyderabad (@SunRisers) May 19, 2025
Heinrich Klaasen | #PlayWithFire | #LSGvSRH | #TATAIPL2025 pic.twitter.com/ZcbUhYpy3Y
அவர் 18 பந்துகளில் அரைசதம் கடந்து 20 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷன் 35 ஓட்டங்களும், ஹென்ரிச் கிளாசென் 47 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
Rewriting history 🔥#PlayWithFire | #LSGvSRH | #TATAIPL2025 pic.twitter.com/ltIGzEGVFF
— SunRisers Hyderabad (@SunRisers) May 19, 2025
காமிந்து மென்டிஸ் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |