அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தின் மீது தாக்குதல்: ஈரான் கொடுத்த மிகப்பெரிய பதிலடி
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் மற்றொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
தீவிரமடையும் அமெரிக்கா-ஈரான் மோதல்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எதிராக அமெரிக்கா ஈரான் மீது 3 கட்டங்களாக புதிய தாக்குதலை முன்னெடுத்தது.
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய படைகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் பல்வேறு செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்திய தகவலின் படி, தெற்கு ஈரானின் ஜாக், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, சிரிக் போன்ற பல பகுதிகளில் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.
சிரிக் மாவட்டத்தில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 2 தண்ணீர் தொட்டிகள் அழிக்கப்பட்டுள்ளது.
ஈரான் பதிலடி
அமெரிக்காவின் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத்தில் உள்ள அலி அல் சேலம்(Ali Al Salem) தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

அத்துடன் இதற்கு ஒரு படி மேலாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தின் மீது IRGC ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் ஈரான் கடுமையான பதிலடியை திருப்பி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |