ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: கிரேக்க கப்பலை சிறைபிடித்த ஈரான் கடற்படை
ஹார்முஸ் ஜலசந்தியில் கிரேக்க கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.
கிரேக்க கப்பல் சிறைப்பிடிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த எபமனோட்ஸ் (Epamnodes) என்ற கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை(IRGC) சிறை பிடித்துள்ளது.
லைபீரிய நாட்டின் கொடியுடன் இருந்த இந்த கப்பல் கிரேக்க நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பல் அமெரிக்க இராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 6 மாதங்களில் இந்த கப்பல் பல முறை அமெரிக்க இராணுவ தளத்திற்கு சென்று வந்து இருப்பதாக ஈரானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் எபமனோட்ஸ் கப்பல் ஈரானின் தீவிர கண்காணிப்பு கீழ் வர முக்கிய காரணம் என்று ஈரான் விளக்கமளித்துள்ளது.
ஈரானிய கடற்படை விடுத்த தொடர் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் மட்டுமே கப்பலை பின் தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக சிறைப்பிடித்ததாக விளக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |