ஹார்முஸில் வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மீட்கப்பட்ட 10 பேர்: இந்தியர் ஒருவர் மாயம்
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமான் கடற்கரைக்கு அருகே சென்ற சைப்ரஸ் நாட்டிற்கு சொந்தமான GFS Galaxy என்ற வணிகக் கப்பல் மீது ஈரானிய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் வணிகக் கப்பல் தீப்பிடித்து சேதமடைந்தது. அப்போது கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனால் ஒரு இந்தியர் மட்டும் மாயமாகி இருப்பதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா கண்டனம்
இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வன்மையாக கண்டித்துள்ளது.
மாயமான இந்தியரை தேடும் பணியில் ஓமான் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரகமும் விரைவாக செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது கவலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வன்முறையை கைவிட்டு, தூதரக முயற்சிகள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். அத்துடன் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு வணிகக் கப்பல்களுக்கான தடையற்ற பாதையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நியாயப்படுத்திய ஈரான்
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததால் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தாக்குதலை நியாப்படுத்தியுள்ளது.
மேலும் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கியமான கடல் வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |