சரக்கு கப்பல் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: பிரித்தானியாவின் UKMTO தகவல்
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய பாதுகாப்பு படைகள் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் சரக்கு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானிய புரட்சிகர காவல் படை இந்த தாக்குதலை காலை 7.55 மணிக்கு நடத்தி இருப்பதாக பிரித்தானியாவின் UKMTO தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து இருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அறிவித்துள்ளார்.
டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு இருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலில், கப்பலுக்கு சேதம் ஏற்பட்டு இருந்தாலும், அதிலிருந்த பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கடலில் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
UKMTO WARNING 041-26
— UKMTO Operations Centre (@UK_MTO) April 22, 2026
Click here to view the full Warning⤵️https://t.co/oXDfRxeBwc#MaritimeSecurity #Marsec pic.twitter.com/tguqtbkWRf
அமெரிக்கா நீடித்துள்ள இந்த போர் நிறுத்த அறிவிப்புக்கு ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ பதிலையும் வெளியிடவில்லை.
அதே சமயம், சமீபத்தில் அமெரிக்கா ஈரான் கப்பலை சிறைபிடித்தது மற்றும் இந்திய பெருங்கடலில் ஈரானிய எண்ணெய் கப்பலை சோதனையிட்டது ஆகிய நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |