இஸ்ரேலை நோக்கி பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஈரான் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன?
இஸ்ரேல் மீது ஈரான் கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் தூதரகம் மீது தாக்குதல்
கடந்த ஏப்ரல் 1ம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை குற்றம் சாட்டி இருந்தது.
மேலும் ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்து இருந்தது.
View from the Temple Mount in #Jerusalem
— NEXTA (@nexta_tv) April 14, 2024
99% of launches towards Israel were intercepted - YNET. pic.twitter.com/0AyexUq33K
இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் இந்த தாக்குதலில் 2 ஜெனரல்கள் மற்றும் 7 IRGC உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ஈரானின் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் வெளிப்படையான எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்
இந்நிலையில் சனிக்கிழமை(நேற்று) மாலை ஈரானிய ராணுவம் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தகவல்படி, கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்கள் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்க பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தெற்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள இஸ்ரேலிய ராணுவ முகாமில் சிறிய சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
❗️ The Israeli army reported that 200 rockets and drones were launched from Iran, most of them intercepted
— NEXTA (@nexta_tv) April 14, 2024
The military also reported that its base in southern Israel sustained minor damage.
IDF spokesman Hagari reported the serious injury of a 10-year-old girl. In a Bedouin… pic.twitter.com/W6Z98OJlWf
IDF செய்தி தொடர்பாளர் Hagari வழங்கிய தகவலில், தெற்கு இஸ்ரேலின் அராத் அருகிலுள்ள பெடோயின் குடியேற்றத்தில் 10 வயது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் சிறுமி தற்போது தீவிரமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |