ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டை மீறிய நடிகைகள் மீது வழக்குப்பதிவு
ஈரானில் ஹிஜாப் அணியாததற்காக மேலும் இரண்டு நடிகைகள் மீது ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் ஆடைக் கட்டுப்பாடு
ஈரான் நாட்டில் ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராடிய பலர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் பெண்களின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது.
முன்னதாக இந்த ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதற்காக விளைவுகளைச் சந்தித்தவர்களைத் தவிர, இப்போது மேலும் இரண்டு பெண் நடிகர்கள் இந்த ஆடைக் குறியீட்டை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
Baran Kosari PC: AFP
இரண்டு நடிகைகள் மீது வழக்குப்பதிவு
ஈரானிய சினிமாவில் நடித்ததற்காக அறியப்பட்ட பரன் கோசாரி (Baran Kosari), 37 மற்றும் ஷகாயேக் டெஹ்கான் (Shaghayegh Dehghan), 44 ஆகியோருக்கு எதிராக தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் அவர்கள் தலையில் முக்காடு அணியாமல் பொதுவில் தோன்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விசாரணைக்குப் பிறகு அவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடிகைகள் இருவரும் அபராதம் அல்லது சிறைத்தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Shaghayegh Dehghan Source: IMDb
முன்னதாக, நடிகைகள் Katayoun Riahi, Pantea Bahram, Afsaneh Baygan மற்றும் Fatemeh Motamed-Aria ஆகியோர் தலையில் முக்காடுகளை அகற்றியதற்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.