அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கதவுகளை மூடிய ஈரான்: ரகசிய தொடர்புகள் இல்லை என விளக்கம்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை முற்றிலுமாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய தலைவர்கள் உயிரிழப்பு
அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்கா இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி முகுமுத் அகமதிநெச்சாத் உட்பட 48 தலைவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை கதவுகளை மூடிய ஈரான்
இந்நிலையில் அமெரிக்காவுடனான அனைத்து விதமாக பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி அறிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா உடனான தூதரக உறவுகளை மீண்டும் தொடங்க ஈரான் முயன்று வருவதாக வெளியான தகவலையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி, ஓமனின் தூதர் மூலமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டு இருந்தது.
அனைத்தும் வதந்தி என்று குறிப்பிட்ட லாரிஜானி, அமெரிக்காவுடன் எந்தவொரு ரகசிய தொடர்பும் இல்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |