ட்ரம்ப் சொல்வது முற்றிலும் தவறு... ஈரான் தரப்பு மறுப்பு
ஈரானில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப்படுவதாகவும், அமைதி வழியில் போராடுபவர்கள் கொல்லப்படுவதாகவும், ஆகவே, ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் சொல்வது முற்றிலும் தவறு...
ஈரானில் போராட்டங்களில் ஈடுபட்ட 800 பேரை ஈரான் அரசு கொல்ல இருந்ததாகவும், தனது தலையீட்டால் அது நிறுத்தப்பட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் கூறுவதில் உண்மையில்லை என ஈரான் மூத்த அதிகாரியான Mohammad Movahedi என்பவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் கூறியுள்ள அந்த விடயமும் தவறு, அப்படி ஒரு எண்ணிக்கையும் இல்லை, அவர்களைக் கொல்ல ஈரான் அரசு முடிவு செய்யவும் இல்லை என கூறியுள்ளார் Mohammad Movahedi.
விடயம் என்னவென்றால், ஈரான் அரசு இணைய சேவைகளை துண்டித்துவிட்டதால், ஈரானில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அறிந்துகொள்வது சவாலான விடயமாக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பினர், ஈரானில் 5.002 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4,716 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 203 பேர் அரசு தொடர்புடையவர்கள் என்றும், 43 பேர் பிள்ளைகள் என்றும், 40 பேர் போராட்டங்கள் பக்கம் கூட செல்லாத பொதுமக்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |