சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை! திட்டவட்டமாக மறுத்த ஈரான்
இஸ்லாத்தின் புனிதமான விஷயங்களை அவமதித்ததன் மூலம் சல்மான் ருஷ்டி மக்களின் கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும் தன்னை ஆளாக்கிக் கொண்டார் - வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி
75 வயதான ருஷ்டி, வெள்ளியன்று நியூயார்க்கில் ஒரு இலக்கிய நிகழ்வில் தாக்கப்பட்ட பின்னர், பல கத்திக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது அமெரிக்காவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது மகன் ஜாபர் தெரிவித்தார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து ஈரான் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
PC: Helmut Fohringer/EPA
சல்மான் ருஷ்டி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய நபருக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும், இதனை திட்டவட்டமாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, 'இந்த தாக்குதலில் சல்மான் ருஷ்டி மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தவிர வேறு யாரையும் பழி மற்றும் கண்டனத்திற்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் கருதவில்லை' என தெரிவித்துள்ளார்.
PC: Atta Kenare/AFP