ஈரானின் Shahed ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முடியவில்லை... ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ரகசிய கூட்டம் ஒன்றில், ஈரானின் ஷாஹெத் தாக்குதல் ட்ரோன்கள் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும், முறியடிக்க முடியவில்லை என்றும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
சவாலாக மாறியுள்ளது
ஈரானின் ஷாஹெத் ட்ரோன்கள் எதிர்பார்த்ததை விட பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாக பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஷாஹெத் ட்ரோன்கள் தாழ்வாகவும் மெதுவாகவும் பறக்கும் திறன் கொண்டவை - இந்த அம்சம் காரணமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட ஷாஹெத் ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலாக மாறியுள்ளது.
இதனிடையே, ட்ரோன் தாக்குதல் தொடர்பான அச்சத்தைக் குறைக்க முயற்சித்த அதிகாரிகள், அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் Interceptor-களை வாங்கிக் குவித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஈரானுடனான போர் தீவிரமடைவதால், உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை உருவாக்கி மத்திய கிழக்கை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, செவ்வாயன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், ஈரானின் பெரும்பாலான இராணுவ நிறுவல்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றார். ஆனால், ஈரான் தரப்பில் இருந்து தாக்குதல் நீடித்து வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளித்த அதிகாரிகள், ஈரானின் ஏவுகணைத் திறன்களை, அதன் கடற்படையை அழிப்பது, அதன் அணு ஆயுத லட்சியங்களை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் அந்த நாடு போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதைத் தடுப்பது போன்ற ட்ரம்ப் சமீபத்தில் வகுத்த இலக்குகளை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
வரம்பற்ற ஆயுத விநியோகம்
இதனிடையே, நாடாளுமன்றத்தின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் தெரிவிக்கையில், போர் வாரக்கணக்கில் நீடிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.
ஆனால், அமெரிக்காவிற்கோ அல்லது மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கோ உடனடி அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இந்தப் போரைத் தொடர முடிவு செய்ய உண்மையில் என்ன காரணம் என்பதற்கான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவிடம் வரம்பற்ற ஆயுத விநியோகம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அரிசோனாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் மார்க் கெல்லி,
ஈரானியர்கள் ஏராளமான ஷாஹெத் ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், நடுத்தர தூரம், குறுகிய தூரம் செல்லும் ஏவுகணைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களிடம் ஒரு பெரும் கையிருப்பும் உள்ளது. அமெரிக்கா எங்கிருந்து தங்கள் ஆயுதங்களை நிரப்பிக் கொள்ளும் என்ற கேள்வியும் மார்க் கெல்லி முன்வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |