தரைமட்டமான நகரம்...ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: மீட்பு பணிகள் தீவிரம்
சனிக்கிழமை அதிகாலை ஈரானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட 6.1 என்ற அளவிலான நிலநடுக்கத்தில் 5 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் 12 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஈரானின் வளைகுடா பகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீடீர் நிலநடுக்கத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர் மற்றும் 12 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவரான மெஹ்ர்தாத் ஹசன்சாதே தெரிவித்துள்ளார்.
வளைகுடா கடற்கரை அருகில் உள்ள சாயே கோஷ் கிராமத்தை முற்றிலுமாக சிதைத்த 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 6.3 ரிக்டர் மற்றும் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்துள்ளது.
மேலும் அரசு செய்தி நிறுவனமான இர்னா வெளியிட்டுள்ள தகவலில், நிலநடுக்கத்தை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் ஏற்பட்டுதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் முதல் நிலநடுக்கத்திலேயே இறந்துள்ளனர். அடுத்த ஏற்பட்ட இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கத்தில், பொதுமக்கள் யாரும் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியர்கள் மீது அடுத்தடுத்து சுமத்தப்படும் கூலிப்படை குற்றசாட்டுகள்: ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை
ஏனெனில் மக்கள் முதல் நடுக்கத்தின் போதே வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என்று பந்தர் லெங்கே நாட்டின் கவர்னர் ஃபோட் மொரட்சாதே தெரிவித்ததாக இர்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.