நீங்கள் அழித்து விடாமல் கவனமாக இருங்கள்! டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்
டிரம்ப் தன்னை தானே அழித்து கொள்ளாமல் இருக்குமாறு ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெடித்த வார்த்தை போர்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையிலான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உலக எரிசக்தி தேவையின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதன் விளைவாக சர்வதேச அளவில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாரசீக வளைகுடா வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தை ஈரான் தடுத்தால் 20 மடங்கு மிகப்பெரிய தாக்குதலை ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் என்று நேற்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவரும், ஈரான் உச்ச தலைவரின் ஆலோசகருமான அலி லாரிஜானி, டிரம்பின் கருத்துக்கு பதிலடி X தளத்தில் கொடுத்துள்ளார்.
அதில், “ஈரான் தியாகங்களால் நிறைந்த நாடு, இது உங்களின் வெற்று கூச்சலுக்கு எல்லாம் அஞ்சாது. உங்களை விட பெரியவர்களாலேயே ஈரானை அழிக்க முடியவில்லை, நீங்கள் உங்களை அழித்து கொள்ளாமல் கவனமாக இருங்கள் என்று எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதால் உலக எண்ணெய் விநியோகம் 20 சதவீதம் வரை முடங்கியுள்ளது.
இது உலகளாவிய எரிசக்தி சந்தையில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |