ரஷ்யாவிற்கு அளிக்கும் ஆதரவை உடனே நிறுத்துங்கள்: ஈரானை வலியுறுத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி
ரஷ்யாவுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்துமாறு ஈரானிடம் இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தல்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் கேட்டுக்கொண்டார்.
தொலைபேசியில் இப்ராஹிம் ரைசியிடம் உரையாடிய மக்ரோன், ரஷ்யாவிற்கு ஈரான் விநியோகிதத்துவரும் ட்ரோன்களால் ஏற்படும் கடுமையான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான விளைவுகளை எடுத்துரைத்தார். மேலும், உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக போரிடும் ரஷ்யாவிற்கு டெஹ்ரான் வழங்கும் ஆதரவை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
Ludovic Marin / AFP - Getty Images
ட்ரோன் தொழிற்சாலை குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்
ட்ரோன் தொழிற்சாலையை கட்டுவதற்கு ரஷ்யாவிற்கு ஈரான் பொருட்களை அனுப்புவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதையடுத்து பிரெஞ்சு ஜனாதிபதி ஈரானிய ஜனாதிபதியை தொடர்புகொண்டார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முழுமையாக செயல்படும் என எதிர்பார்க்கப்படும் ட்ரோன் தொழிற்சாலையை உருவாக்க ஈரானிலிருந்து ரஷ்யா பொருட்களை இறக்குமதி செய்து வருவதாக ஜான் கிர்பி கூறினார்.
LUDOVIC MARIN/AFP via Getty Images
மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 900 கிலோமீட்டர் (560 மைல்) தொலைவில் உள்ள அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வரவிருக்கும் இந்த ஆலையின் இருப்பிடத்தின் செயற்கைக்கோள் படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
அமெரிக்க தரவுகளின்படி, ட்ரோன்கள் ஈரானில் கட்டப்பட்டு, காஸ்பியன் கடல் வழியாக அனுப்பப்பட்டு, பின்னர் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் படைகளால் செயல்படும் என்று கிர்பி கூறினார்.
ஈரானுக்கு இதனால் என்ன பலன்?
வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, ஈரான் ரஷ்யாவிடம் இருந்து Su-35 போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் மற்றும் YAK-130 போர் பயிற்சி விமானங்களை வாங்க முயல்கிறது.
உக்ரைனுக்கு எதிரான போரின் போது ரஷ்யாவிற்கு ராணுவ தளவாடங்களை அனுப்பியதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். Join Now