இஸ்ரேலின் மிக முக்கியமான நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேலுக்காக ஈரானில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்த மிக முக்கியமான அதிகாரி ஒருவருக்கு ஈரான் நிர்வாகம் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.
மொசாட் உளவுத்துறை
வெளியான தகவலின் அடிப்படையில், Bahman Choubi-asl என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் திங்களன்று தூக்கிலிடப்பட்டுள்ளார். ஈரானில் இஸ்ரேலுக்காக உளவு வேலைகள் பார்க்கும் மிக முக்கியமான உளவாளிகளில் இவர் ஒருவர் என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேலுடன் பல தசாப்த கால நிழல் போரில் ஈடுபட்டுவரும் ஈரான், இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறையுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி பல நபர்களை தூக்கிலிட்டுள்ளது.
ஈரானில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்புடைய நபரின் ஒத்துழைப்பை ஈர்ப்பதில் மொசாட்டின் முக்கிய குறிக்கோள், அரசாங்க நிறுவனங்களின் தரவுகளைப் பெற்று ஈரானிய தரவு மையங்களில் அத்துமீறலை உருவாக்குவதாகும்.
மட்டுமின்றி, ஈரானில் மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்யும் வழியை ஆராய்வதும் உளவாளிகளின் இலக்குகளில் ஒன்று என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் அந்த நபரின் மேல்முறையீட்டை நிராகரித்து, மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. ஜூன் மாதத்தில் ஈரானுக்குள் பல்வேறு இலக்குகளை இஸ்ரேல் தாக்கியபோது, ஈரான்-இஸ்ரேல் மோதல் நேரடிப் போராக வெடித்தது.
மரணதண்டனை
அத்துடன், இஸ்ரேலுக்கு என எப்போதும் களத்தில் இறங்கும் அமெரிக்கா, ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதன் பின்னர் இரு தரப்பும் போர் நிறுத்தம் அறிவித்தனர்.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானியர்களின் மரணதண்டனை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது, சமீபத்திய மாதங்களில் மட்டும் குறைந்தது 10 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |