ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடிய ஈரானிய பாடகி: 74 கசையடிகள் வழங்க உத்தரவு
ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடியதற்காக ஈரானிய பாடகிக்கு 74 கசையடிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் அஹ்மதி என்ற பாடகி அவருடைய யூடியூப் சேனலில் தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணியாமல் கையில் இல்லாத ஆடையுடன் 4 ஆண்களுடன் இணைந்து பாடல் பாடியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அவர் பாடிய அஸ் கூன்-இ ஜவனனே வதன்(நாட்டு இளைஞர்களின் இரத்திலிருந்து) என்ற தேசபக்தி பாடல் நாடு முழுவதும் வைரலாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வீடியோ வைரலானதை அடுத்து பாடல் பாடிய அஹ்மதி மற்றும் அவரது இசைக்குழுவினர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடல் பாடியதற்காக ஈரானிய பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு(Parastoo Ahmadi)74 கசையடிகள் தண்டனையாக வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
One day after the U.S. signed a deal with the Islamic Republic، the regime in Iran, handed Parastoo Ahmadi 74 lashes for singing on YouTube.
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) June 18, 2026
They call America the Great Satan. And then they flew to the table and signed a deal with the «Devil«. But a woman’s voice scared them… pic.twitter.com/FMJdKD7EGZ
அஹ்மதியின் இசைக்குழுவில் இருந்த 8 பேருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்வதற்கும், இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நீதித்துறையின் இந்த தீர்ப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |