அமெரிக்க ஜனாதிபதிக்கு மிகப்பெரிய விமானத்தை பரிசாக வழங்கிய கத்தார்: பாராட்டிய டிரம்ப்
கத்தார் பரிசாக வழங்கிய புதிய விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
பறக்கும் வெள்ளை மாளிகை
மேரிலாந்தின் ஆண்ட்ரூஸ் கூட்டு தளத்தில் உள்ள மிகப்பெரிய விமான கொட்டகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் இடைக்கால பயன்பாட்டிற்காக கத்தார் பரிசாக வழங்கிய போயிங் 747 விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

போயிங் நிறுவனத்திடம் இருந்து புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானங்கள் வரும் வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயண திட்டங்களை இந்த போயிங் 747 பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை அறிமுகப்படுத்தி பேசிய டிரம்ப், இதுவரை யாரும் பார்த்திராத அதிநவீன சொகுசு வசதிகள் இந்த விமானத்தில் இருப்பதாகவும், இது ஒரு பறக்கும் வெள்ளை மாளிகையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக டிரம்ப் பாராட்டியுள்ளார்.
விமானத்தின் என்ஜின் தரம், மர வேலைப்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பெருமிதம் தெரிவித்த டிரம்ப், இதனை பரிசாக வழங்கிய கத்தாருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் லண்டன், ஜேர்மனி போன்ற நாடுகளில் தரையிறங்கும் போது இதற்கு நிகரான விமானங்கள் எதுவும் இருக்காது என்றும், அமெரிக்காவிற்கு இதுபோன்ற விமானம் ஒன்று அவசியமானது என்றும் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட சோதனை
The VC-25B Bridge aircraft has officially arrived at Joint Base Andrews!
— U.S. Air Force (@usairforce) June 19, 2026
More info: https://t.co/xhurcI0mjL pic.twitter.com/zyUpB99jqm
கத்தார் பரிசாக வழங்கிய இந்த போயிங் VC -25B Bridge என்ற விமானம், பல கட்ட பணியமர்த்தல் பயணங்களை மேற்கொள்ள இருப்பதாகவும், பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பும், நலனுமே எங்களின் முதல் முன்னுரிமை என்று அமெரிக்க விமானப்படை செயலாளர் டிராய் மெங்க் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |