பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட ஈரான் போர் விமானம்: சர்ச்சையை கிளப்பியுள்ள புகைப்படம்
ஈரான் போர் விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சமாதான தூதுவர் பாகிஸ்தான்
ஈரான் - அமெரிக்கா இடையே வெடித்துள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சியில் பாகிஸ்தான் தூதராக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரானின் இராணுவத்தின் போயிங் 747 ரக விமானம் பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் விமான நிலையத்தில் ஈரான் விமானம் தரையிறங்கிய காணொளி காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இணையத்தில் வெளியான புகைப்படம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்களில் ஈரானை சேர்ந்த RC-130H என்ற போர் விமானம் பாகிஸ்தானின் நூர் கான் விமானத்தில் தரையிறக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் இந்த ஈரானிய போர் விமானம் கடந்த ஒரு மாத காலமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வாளர் டேமியன் சைமன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அடுத்து, பாகிஸ்தானிடம் அமெரிக்கா எச்சரிக்கையாக இருக்கும்படி அமெரிக்க பாதுகாப்பு செயலகத்தில் அந்நாட்டின் செனட் அதிகாரி கிரஹாம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |