அமெரிக்க ஆளில்லா விமானம் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு! இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதட்டம்
அமெரிக்க டிரோன் (ஆளில்லா விமானம்) மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே இச்சம்பவம் நடந்ததாக ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே பறந்த அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான MQ-9 Reaper டிரோன் மீது எச்சரிக்கும் விதமாக ஈரானின் வான் பாதுகாப்பு துப்பக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை ஊடகம் வெளியிடவில்லை.
? تصاویر هشدار پدافند هوایی #ایران به پهپاد MQ-9 ارتش #آمریکا در حوالی #تنگه_هرمز و نزدیک مرز کشورمان که ساعتی پیش صورت گرفت pic.twitter.com/7QvL23pOav
— نور نیوز (@nournews_ir) August 11, 2021
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018-ல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி, அந்நாட்டின் மீது மீண்டும் தடைகளை விதித்த நாள் முதல் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்து வருகிறது.
அரபிக்கடல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் வெளிநாட்டு கொடி கப்பல்கள் மீது நடந்த பல தாக்குதல்களுக்கு ஈரான் மீது பைடன் அரசு குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மத்தியில் அமெரிக்க டிரோன் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.