உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டிக்கு பிறகு ஈரான் அணி தங்கள் உடைமாற்றும் அறையில் கையெழுத்து பிரதி ஒன்றை விட்டுச் சென்றுள்ளது.
ஈரான் - பெல்ஜியம் அணிகள் மோதல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோஃபி மைதானத்தில் நடைபெற்றது.
பரபரப்புடன் நடைபெற்ற இந்த போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால். போட்டி நிறைவடைந்த பிறகு ஈரான் கால்பந்து அணியினர் தங்கள் உடை மாற்றும் அறையில் உருக்கமான கையெழுத்து பிரதி ஒன்றை விட்டுச் சென்றுள்ளனர்.
நெகிழ்ச்சியான கையெழுத்து பிரதி
அந்த கடிதத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பண்டைய பாரசீகம் முதல் இன்றைய நவீன ஈரான் வரை. எங்கள் நாட்டின் ஆன்மா எப்போது உறுதியுடன் இருக்கும்.

நாங்கள் மிகுந்த பெருமையுடன் இங்கு வந்தோம், கடுமையாக போட்டியிட்டோம், அதைப்போல எங்கள் சுயமரியாதையுடன் இங்கிருந்து விடைபெறுகிறோம்.
எங்களுக்கு சிறப்பான விருந்தோம்பல் வழங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சோஃபி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் செலுத்தினர்.
இறுதியில் உலக நாடுகளிடையே அமைதி, நட்பு மற்றும் மரியாதை தொடர்ந்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |