10 ஆண்டுகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு: ஜோர்டானில் 6 பேருக்கு தூக்கு
ஜோர்டான் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆறு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜோர்டானில் மரண தண்டனை
ஜோர்டானில் கடந்த 9 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை தற்போது மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மரண தண்டனை மீதான இடைக்கால தடை முடிவுக்கு வந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 6 பேருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளின் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு காரணமாக இருந்தவர்களுக்கே இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக ஜோர்டான் அரசு செய்தி தொடர்பாளர் முகமது மொமானி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோர்டான் சிறையில் தற்போது 100க்கும் மேற்பட்டவர்கள் மரண தண்டனையின் கீழ் காத்திருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பிற்காக செயல்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் பொருட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு படிப்படியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
2017-லில் நிறுத்தப்பட்ட மரண தண்டனை
ஜோர்டான் நாட்டில் பொதுவாக தீவிரவாதம் மற்றும் கடுமையான குற்றச் செயல்களுக்கே மரண தண்டனையானது விதிக்கப்படும்.
கடந்த 2017 ம் ஆண்டு 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜோர்டான் மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |