அமெரிக்காவின் தகவல் தொடர்பு மையத்தை அழித்த ஈரான் - செயற்கைக்கோள் படம் உறுதி
கத்தாரில் அமெரிக்காவின் முக்கிய தகவல் தொடர்பு குவிமாடத்தை ஈரான் அழித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மத்திய கிழக்கு பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற 12 நாள் இஸ்ரேல்-இரான் போரின் தொடர்ச்சியாக, ஜூன் 23-ஆம் திகதி, இரான் அல்உதெய்த் விமான தளத்தில் (Al Udeid Air Base) ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கத்தாரில் உள்ள இந்த தளம் அமெரிக்காவின் முக்கிய ராணுவ கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது.
இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் செயற்கைக்கோள் தொடர்புகளுக்குப் பயன்படும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஜியோடெசிக் டோம் (Geodesic Dome) அழிக்கப்பட்டது.
Associated Press வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது.
Pentagon செய்தித்தொடர்பாளர் சான் பார்னெல் இதை உறுதிப்படுத்தியபோதும், "தளத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார். "Al Udeid தொடர்ந்து செயற்பாட்டில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “இரான் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கியதால் உயிரிழப்பு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
14 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் 13 இடைமறிக்கப்பட்டு, 1 மட்டும் குறைவான முக்கியத்துவம் கொண்ட இடத்தில் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.
ஈரான் இது தொடர்பாக “தளம் முழுமையாக அழிக்கப்பட்டது” என பிரச்சாரம் செய்தாலும், செயற்கைக்கோள் படங்கள் மற்ற கட்டடங்கள் இயல்பாக செயல்படுவதை காட்டுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா வழியிலான உடனடி சமாதான நடவடிக்கை மூலம் பிராந்தியம் முழுவதும் பெரிதாக பரவக்கூடிய போர் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran missile strike Qatar 2025, Al Udeid Air Base satellite dome, US Iran Israel war update, Pentagon confirms Iran attack, Geodesic dome destruction Qatar, US radar dome Iran missile strike