அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்: அமெரிக்க நிலைகள் மீது பதிலடி தாக்குதல்
அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்கியதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் 80க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரானிய வான் பரப்பில் சுற்றித்திரிந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புஷேர் மாகாணத்தில் கோர்மோஜ் பகுதியில் வான் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அத்துமீறி பறந்த அமெரிக்க ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC அறிவித்துள்ளது.
மேலும் ஈரான் மீது அமெரிக்க நடத்திய சமீபத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படை இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |