80க்கும் மேற்பட்ட இலக்குகள் குறிவைத்து அழிப்பு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை
ஈரானில் 80 க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானை குறிவைத்து தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்கியதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப்படை(CENTCOM) அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஈரானின் ராணுவ வலிமையை குறைப்பதையும், சர்வதேச நீர்வழிப் பாதையில் ஈரானின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த தாக்குதலின் முக்கிய நோக்கமாக செல்லப்படுகிறது.

CENTCOM உறுதிப்படுத்திய தகவலின்படி, ஈரானில் 80க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ராணுவ தலைமை மையங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்கள் ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.
ஈரானுக்கு எச்சரிக்கை
ஈரான் மீதான தாக்குதல் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று CENTCOM கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்க படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க தலைமையகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |