தயாராகும் ஈரான்... இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
இஸ்ரேலுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்க ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடையாளம் காணப்படவில்லை
இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் நேரடி இராணுவ தாக்குதல் என்பது ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், தற்காப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா தீவிரமாக ஆதரித்து வந்துள்ளதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், இதுவரை வான் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரான் தரப்பில் இருந்து உடனடியாக எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா படுகொலைக்கு ஈரான் கண்டிப்பாக பழி தீர்க்கும் என உச்ச தலைவர் சனிக்கிழமை சபதம் செய்திருந்தார்.
இஸ்ரேலிய துருப்புக்கள் தெற்கு லெபனான் மீது படையெடுப்பைத் தொடங்கிய சில மணிநேரங்களில், ஈரானிய தாக்குதல் பற்றிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக
வடக்கு இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் ஹிஸ்புல்லா ஆதரவு எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் காஸா மீதான தாக்குதலை அடுத்தே ஹிஸ்புல்லா படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக எப்போதும் உடனிருப்போம் என்றே ஹிஸ்புல்லா அமைப்பு கூறி வருகிறது.
ஆனால், தற்போதைய நெருக்கடிகள் பிராந்தியம் முழுவதும் ஒரு போருக்கான சூழலை உருவாக்கியுள்ளதாகவும், இதில் அமெரிக்காவும் ஈரானும் களமிறங்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |