பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள்

India Iran Iran President Women Ayatollah Ali Khamenei
By Karthikraja Jun 21, 2025 10:48 AM GMT
Report

 ஈரான் உச்சத்தலைவர் காமேனியின் பழைய பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரான் இஸ்ரேல் போர்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் திகதி, இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையே போர் வெடித்துள்ளது. 

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் | Iran Khamenei Old X Post About Women India

இந்த போரில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனியை கொன்று விடுவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து வருகிறது. 

காமேனியின் இருப்பிடம் எங்களுக்கு தெரியும். அவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தெரிவித்துள்ளார். 

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் | Iran Khamenei Old X Post About Women India

ஆனால், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் தண்டிக்கப்படும். அமெரிக்கா தலையிட்டால் பெரும் சேதாரத்தை சந்திக்கும் என பதிலடி கொடுத்துள்ளார் காமேனி. 

பெண் ஒரு மலர் 

இந்நிலையில், பெண்கள் மற்றும் கறுப்பினத்தவர் உரிமை, இந்தியா குறித்த காமேனியின் பழைய எக்ஸ் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2013 ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவில், "பெண்ணின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உள்ளது. மேலும் அவர்களுடைய உணர்ச்சி நிலையைப் பற்றி அலட்சியமாக இருக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார். 

மேலும், "பெண் ஒரு மென்மையான மலர், வீட்டு வேலைக்காரி அல்ல. ஒரு பெண்ணை வீட்டில் ஒரு பூவைப் போல நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் சாபம்? மீண்டும் கவனம் பெரும் அத்தேஃபே சஹாலே

ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் சாபம்? மீண்டும் கவனம் பெரும் அத்தேஃபே சஹாலே

கறுப்பினத்தவர் உரிமை தொடர்பான பதிவில், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான ஒரு நாளை அவர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் இதுபோன்ற குற்றங்கள் கறுப்பின மக்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன" என அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா

தனது பள்ளிப்பருவம் குறித்து வெளியிட பதிவில், "நான் முதல் நாளிலிருந்தே ஒரு சிறப்பு மேலங்கியை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றேன். மற்ற குழந்தைகள் முன் அதை அணிவது சங்கடமாக இருந்தது, ஆனால் குறும்புத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருந்து அதை ஈடுகட்ட முயற்சித்தேன்" என தெரிவித்துள்ளார். 

இன்னொரு பதிவில், "நான் சினிமா பார்ப்பதில்லை. ஆனால் கவிதை மற்றும் நாவல் வாசிப்பில் நான் வழக்கமான வாசகர் இல்லை. தீவிர வாசகர்" என தெரிவித்துள்ளார். 

மற்றொரு பதிவில், "நேருவின் 'உலக வரலாற்றின் பார்வைகள்' என்னும் புத்தகத்தைபடிக்கும் முன், காலனித்துவத்திற்கு முன்பு பல முக்கியமான முன்னேற்றங்களை இந்தியா சந்தித்தது எனக்குத் தெரியாது" என தெரிவித்துள்ளார். 

86 வயதான காமேனியை, ஈரானின் மூத்த மத குரு மட்டுமே என நினைத்து தவறு என நெட்டிசன்கள் அவரை குறித்து விவாதித்து வருகின்றனர்.            

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US